இந்த 5 ரீமேக் திரைப்படங்களை தான் மக்கள் கழுவி கழுவி ஊத்தினார்கள்.! அலப்பறைக்கு மட்டும் குறைச்சல் இல்ல

movies
movies

பிற மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படங்கள் பல உள்ளது அதில் கில்லி போன்ற ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அப்படி ரீமேக் செய்யப்பட்டு ஓவராக பில்டப் செய்து அசிங்கப்பட்ட ஐந்து ரீமேக் படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ஒஸ்தி:- இயக்குனர் தரணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம் ஒஸ்தி இந்த படம் 2010 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தபாங் என்ற திரைப்படத்தின் ரீமேக் படம் ஆகும்.

வில்லு:- நடிகர் மற்றும் இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் வில்லு இந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி படும் தோல்வியை சந்தித்தது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை தந்தது.இந்த படம் 1998 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான சோல்ஜர் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அனேகன் :- கே வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக கடும் தோல்வியை சந்தித்தது ஆனால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளியான  மேயின் ஹீன் நா என்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

ஸ்டுடென்ட் நம்பர் 1 :- 2003 ஆம் ஆண்டு சிபிராஜ் நடிப்பில் வெளியாகிய திரைபடம் ஸ்டூடண்ட் நம்பர் ஒன். இந்த படம் தெலுங்கில் என் டி ஆர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரா:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கஜேந்திரா இந்த திரைப்படம் தெலுங்கில் என்டிஆர் நடிப்பில் வெளியாகி பிட் அடித்தந்த திரைப்படத்தை தான் தமிழில் ரீமேக் செய்தனர் ஆனால் இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.