தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இப்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படம் பண்ணிருக்கிறார் இதனால் விஜயின் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படிப்பட்ட விஜய் திரையுலகில் நடிக்கும் போது அவ்வளவாக கோபப்பட்டதே கிடையாது.
ஒருவர் மீதும் கோபம் வந்தாலும் அதை நேரடியாக கொட்டி தீர்க்க மாட்டார் பொறுமையாக இருப்பார். இப்படிப்பட்ட தளபதி விஜய் தன்னை மீறி ஒரு இயக்குனருடன் கோபப்பட்டு இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய் பகவதி படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அப்படி பேரரசு இயக்கத்தில் சிவகாசி, திருப்பாச்சி என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார் திருப்பாச்சி படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது பிரபல நிருபர் ஒருவர் விஜயை சந்திக்க வந்திருக்கிறார்.
அப்பொழுது ஷூட்டிங் அவுட்டோரில் நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்பொழுது ஒரு சின்ன செட்டப்பை புகைப்படம் எடுத்து இதுதான் சிவகாசி கதை என எழுதி உள்ளார் இதை விஜய் படித்துவிட்டு செம கோபமடைந்துள்ளார் பிறகு இயக்குனர் பேரரசுக்கு ஃபோன் செய்து கோபத்தை காட்டி உள்ளார் இதனால் பயந்து போன பேரரசு விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததும் அவரை கூல் பண்ண முடிவு செய்து இருந்தார்.
ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த விஜய்யை பார்த்த பேரரசு ஷாக்காகிவிட்டாராம். விஜய் செம கோபத்தில் இருக்கிறார் என்று அவரை வைத்து இன்று ஷூட் பண்ணினால் சரி வராது என நினைத்து மற்ற நடிகர், நடிகைகளுக்கான காட்சிகளை படமாக்கினாராம். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.