தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருவது நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியை பற்றி தான் திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த தம்பதியினர்கள் வாடகைத் தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்கள் இது குறித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர இது பலரையும் அதிர்ச்சியில் அழ்த்தியது.
மேலும் சட்டத்திற்கு எதிராக நயன்தாரா விக்னேஷ் சிவன் இந்த செயலை செய்துள்ளதாக பலரும் ரொம்ப விமர்சனம் செய்து வந்தார்கள் மேலும் இவர்களை சட்டபூர்வமாக போலீசார்கள் அரஸ் செய்வார்களா எனவும் கூறிவந்த நிலையில் தற்போது எல்லாம் பாலிவுட் நட்சத்திரங்கள் கூட வாடகை மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் தற்போது இதற்கு வல்லுநர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதாவது இதற்கு பதிலளித்த சட்ட வல்லுநர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம் ரமேஷ் விக்னேஷ் சிவன் நயன்தாரா செய்தது குற்றமில்லை எனவும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்களுடைய இரண்டும் ஆண் குழந்தைகளையும் வளர்க்கலாம் எனவும் தெள்ளத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது வாடகத்தாய் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடந்துள்ளது அதாவது தமிழகத்தில் காதல் மன்னன் நடிகர் ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் இவ்வாறு வாடகத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்.
பிரபல மருத்துவராக இருந்து வரும் கமலா செல்வராஜ் செயற்கை குழாய் மூலம் குழந்தை பெறுவதை 20 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் கலைஞர் ஆட்சியில் ஆரம்பித்து வைத்துள்ளாராம் மேலும் இது தற்பொழுது சாதாரணமாகிவிட்டது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.