சிம்பு நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் மாநாடு இந்த திரைப்படம் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான கதையை வெங்கட்பிரபு எடுத்திருந்தார் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிம்புவும் தன அசாதாரணமான திறமையை வெளிக்காட்டி இருந்தார்.
படம் முழுக்க முழுக்க வேற லெவல் இருந்தது. படம் ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளதால் பிரபலங்கள் பலரும் இந்த படத்து பின் வாழ்த்து சொல்வதோடு தனது கருத்துக்களையும் எடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிம்புவின் மாநாடு படத்தை பார்த்துவிட்டு வாழ்த்து சொல்லினார்.
அவரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை அவர் கூறி உள்ளார். அவர் சொல்ல வருவது : மாநாடு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாய் அவர் மாநாடு படம் வெற்றியடைய நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் காமாட்சி மற்றும் மாநாடு பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
இந்த படத்தில் பணிபுரிந்த அவர்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார். இதை பார்த்த இப்படத்தில் பணியாற்றிய நடிகர் பிரேம்ஜி சிவகார்த்திகேயனிடம கேள்வி எழுப்பியிருந்தார் அவர் சொன்னது “என்னை மட்டும் விட்டு விட்டீர்கள்” என கேட்டிருந்தார் அதற்கு சிவகார்த்திகேயன்.
சார் நீங்களும் வெங்கட் பிரபு சாரும் ஒன்னுதானே நினைச்சு தான் உங்க பெயரை சேர்க்கவில்லை இப்பொழுது சொல்லுங்கள் நான் பண்ணுனது தப்பா சார் உங்களுக்கு வாழ்த்து என்று நக்கலாக அவர் பதிலளித்தார் அந்த செய்தியை தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.