Madonna Sebastian : மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக வருபவர் மடோனா செபஸ்டியன் முதலில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
தமிழில் இவர் நடித்த கவண், ஜூங்கா, காதலும் கடந்து போகும், வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் 2023 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக எலிசா தாஸ் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவருடைய ஆக்சன் மற்றும் டான்ஸ் என ஒவ்வொன்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படத்திற்கு பிறகு அவருக்கு சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் நீங்கள் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்ததாக ஒரு தகவல் வெளியானது .
அது உங்களுக்கு தெரியுமா.? என கேள்வி எழுப்பி உள்ளனர் அதற்கு மடோனா பதில் அளித்தது நான் எதுவும் விசாரிக்கவில்லை கேள்விப்பட்டதும் இல்லை என கூறினார். ஒருவேளை லோகேஷ் கிட்ட கேட்டிருந்தால் கண்டிப்பாக சொல்லி இருப்பார் நட்புக்காக பழகக் கூடிய மனிதர் அவருடன் பணியாற்றுவது எளிமையாக இருந்தது.
படப்பிடிப்பில் விஜய் உடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்று சொன்னதும் ஷாக்காகி விட்டேன் ஆனால் அந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நடனமாடி முடித்து விட்டேன்.. இது போல பல கேள்விக்கு அழகாக பதில் அளித்தார்.