ஐபிஎல் 14 வது சீசன் 29 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டது மீதி போட்டிகள் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. மீதி போட்டிகள் விளையாடாமல் இருப்பதால் அதை உடனே நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி தற்போது திட்டம் போட்டு வருகிறார் எங்கு நடத்தினால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் ஒழுங்கா பாதுகாப்புடனும் முடித்து விட தற்போது பல அணுகுமுறைகளைக் கையாண்டு வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த 29 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாண்ட வீரர்களை கண்டறிந்து பல முன்னணி ஜாம்பவான்கள் பாராட்டியும் புகழ்ந்தும் வாசித்து வருகின்றனர். அந்தவகையில் டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள அவேஷ் கான் பற்றி தற்பொழுது அனைத்து விதமான கிரிக்கெட் ஆர்வலர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
உமேஷ் யாதவுக்கு பதிலாக டெல்லி கேப்பிடல் அணியின் பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்டார் அவேஷ் கான். அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் திசை திருப்பினார் பவுன்சர், யார்கர், ஸ்லொவ் பால் போன்றவற்றை போற்று எதிர் அணி பேட்டிங் வீரர்களை தடுமாற செய்தார் இந்த ஆண்டின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக அவேஷ் கான் பார்க்கப்படுகிறார்.
மேலும் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் டெல்லி கேப்பிடல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஒரு கட்டத்தில் களத்தில் இறங்கினர் தோனி. அப்போது குறைந்த ஓவர்களே இருந்ததால் எடுத்த உடனே அதிரடி காட்டுவார் என்று டெல்லி கேபிடல் அணி கேப்டன் பண்ட் எண்ணினார். அப்போது அவேஷ் கானிடம் தோனி விளையாண்டு பல வாருங்கள் ஆகிவிட்டது.
எனவே நீ பவுன்ஸ் பந்துகளை போடு என சொன்னார் நானும் செய்தேன் அப்போது அவரால் அதிரடி காட்ட முடியவில்லை. அதன் பிறகு சுதாரித்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் மற்ற பத்துகளை போட்டேன் . அதில் ஒரு பந்து பேட்டில் பட்டு ஸ்டும்பை அடித்து. தோனி பந்துகள் போடுவது கடினம். சில பந்துகளை நான் ரன் எதுவும் கொடுக்கதால் எனக்கு தைரியம் வந்தது என குறிப்பிடார்.