வடிவேலுவின் வளர்ச்சிக்கு உதவியது “எதிர்நீச்சல் மாரிமுத்து” தானாம் .? இதோ அவரே சொன்ன தகவல்

Marimuthu
Marimuthu

Vadivelu Speak About G. Marimuthu : தமிழ் சினிமா பல திறமையான நடிகர்களை அடுத்தடுத்து இழந்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அந்த வகையில் விவேக், மயில்சாமி, மனோபாலா ஆகியோர்களை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து அண்மையில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

08/09/ 2023 அன்று காலை 6 மணியிலிருந்து 8 மணி வரை டப்பிங் மாரிமுத்து பேசி உள்ளார் பிறகு ஒரு மாதிரியாக இருப்பதாக கூறி வெளியே வந்த மாரிமுத்து திடீரென காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் எப்படியும் 15 அல்லது 20 நிமிஷத்தில் அவரை காப்பாற்றி விடலாம் என முயற்சி செய்து பார்த்தனர்.

ஆனால் அவர் வரும்போது பல்ஸ் இல்லாததால்  அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர் கூறினார் இவர் உயிரிழந்த செய்தியை கேட்ட சின்னத்திரை, வெள்ளி திரை மற்றும் ரசிகர்கள் அனைவரும் உடனே வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர் வர முடியாதவர்கள் தொடர் சமூக வளைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். மாரிமுத்துவின் உடலை அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது இறப்பை தங்கிக் கொள்ளாத பிரபலங்கள் பலரும் இப்பொழுதும் அவரைப் பற்றிய பேச்சுகளை பேசி வருகின்றனர். அப்படித்தான் வடிவேலு மாரிமுத்து குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது.. மாரிமுத்து இறந்து விட்டார் என்று சொன்னத நான் நம்பவே இல்ல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஏன் இப்படி எல்லாம் நடக்கும் என்று ஒண்ணுமே புரியல என கூறினார்.

மேலும் பேசிய வடிவேலு ராஜ்கிரன் சார் கூட இருக்கும் பொழுது நானும் அவரும்  ரொம்ப பழகி இருந்தோம் கண்ணும் கண்ணும் படத்தில் நடித்து கொடுக்க சொன்னாரு.. “அடிச்சு கூட கேட்பாங்க அப்ப கூட சொல்லிடாதீங்க” என்ற காமெடியை மாரிமுத்து தான் உருவாக்கி தந்தார் அதே போல “கிணத்த காணோம் காமெடியையும்” அவர்தான் உருவாக்கினார் என வடிவேலு கூறினார்.