கார்த்தியின் காதல் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரின் மனைவி.! எல்லாம் கைதி படத்தால் வந்த வினை

karthi
karthi

நடிகர் கார்த்திக் தற்போது வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் தமிழ் சினிமா திரைப்படத்தில் வந்தேய தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து பாராட்டுகளை குவித்து வருகின்றார். அப்படி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் அந்த கதைக்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து சர்தார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

மேலும் சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி அவர்கள் ஆறு தோற்றங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். தற்போது கார்த்தி அவர்கள் மார்க்கெட் சினிமாவில் வேற லெவலில் எகிறி கொண்டு வருகிறார். இப்படி சினிமாவில் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அவருடைய மனைவி ஒரு செக் வைத்துள்ளார்.

அதாவது சிவகுமார் குடும்பம் எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் சிறந்த குடும்பம் என்ற பெயரை வாங்கிக் கொண்டு வருகிறது ஆனால் தற்போது கார்த்தியின் மனைவியால் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. அதாவது சினிமாவை பொறுத்தவரை கார்த்தி காதல் படங்களில் நடிப்பது அவருடைய மனைவிக்கு வருத்தம் அளிக்கிறதாக கூறப்படுகிறது.

கார்த்தியின் மனைவி படித்தது சென்னையில் இருந்தாலும் வளர்ந்தது எல்லாம் கிராமத்தில் தான் அதனால் அந்த காலத்தில் எல்லாம் கதாநாயகர்கள் தன்னுடைய திரைப்படங்களில் காதல் காட்சிகள் ஏதாவது ஒன்று வந்தால் அதில் நடிகைகலை தொடாமல் இருந்தார்கள் ஆனால் இப்போது அப்படி கிடையாது. எல்லா நடிகர் நடிகைகளும் தொட்டு நடிப்பது மிகவும் சகஜம் ஆகிவிட்டது.

இதற்கு கார்த்தி அவர்கள் இது போன்ற காதல் காட்சிகள் எதாவது வந்தால் உங்களுடைய கண்ணை மூடி பாருங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கைதி திரைப்படம் கார்த்தி மனைவிக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் இந்த படத்தில் எந்த ஒரு காதல் காட்சிகளும் இடம் பெறவில்லை என்பதற்காக இந்த படம் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் கார்த்தியை இது போன்ற படத்தில் நடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளாராம் ஆனால் பொதுவாகவே கார்த்தி அவர்கள் ஹீரோயின் உடன் சேர்ந்து நடித்ததால் படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன கார்த்திக்கு தற்போது செக் வைத்துள்ளார் அவருடைய மனைவி. இதனால் கார்த்தி அவர்கள் சினிமா வாழ்க்கை வேறு குடும்ப வாழ்க்கை வேறு என புரிய வைக்க பார்க்கிறாராம்.