தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் தற்போது இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் ஏராளமான படங்களில் நடித்த தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்த நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்தும் வருகிறார்.
அப்படி இவர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் ஐந்து சீசனர்களும் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் டி ஆர் பி எல் முதல் 10 இடங்களில் உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில்.
அதற்கு ஏற்றார் போல் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் 24 மணி நேரங்களும் பார்க்கலாம் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவே அந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் லிஸ்ட் சமீபத்தில் வெளியானது அதில் யூடியூப் பிரபலமான ஜி பி முத்து கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிக் பாஸ் தொடங்கிய உடனே ஜி பி முத்து உள்ளே நுழையும்போது கமல்ஹாசன் இன்று இரவு முழுக்க நீங்கள் மட்டும் தான் இருக்கப் போகிறீர்கள் வேற யாரும் வர மாட்டாங்க என கூறி அவரை பயன்படுத்தினார். அதை கேட்டா ஜிபி முத்து பயத்தில் கமல்ஹாசனை கெஞ்ச தொடங்கிவிட்டார்.
மேலும் கமல்ஹாசன் அவர்கள் ஜி பி முத்துவை பார்த்து ஆதாம் ஏவாள் பற்றி கூறி அறிவுரை சொல்ல அதற்கு ஜிபி முத்து ஆதாமா அப்படின்னா என்ன என்று கமலிடமே கேட்டுள்ளார் இதனால் அடுத்ததாக என்ன சொல்வது என்றே தெரியாமல் அமைதியாகிவிட்டார் கமல்ஹாசன். இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஜி பி முத்தூவுக்கே ஜி பி முத்து மீம்சை போட்டு கலாய்த்து வருகின்றனர்.