தமிழ் சினிமாவிற்கு சமீபகாலமாக மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து வருவதோடு வசூலிலும் வாரி குவிப்பதால் நடிகர் தளபதி விஜய் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.
மேலும் விஜய் திரைப்படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு காத்துக்கிடக்கின்றன.
விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த படம் பல இடையூறுகளை தாண்டி திரையரங்கில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் நல்லா கல்லா கட்டியது.
மேலும் காசு பார்க்க மாஸ்டர் திரைப்படம் OTT தளத்திலும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் என்ற இளம் இயக்குநருக்கு கொடுத்துள்ளார்.
அவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் மக்களிடத்தில் நல்ல பெயரைப் பெற்றுள்ள அதன் விளைவாகவே இந்த படத்தை அவருக்கு கொடுத்து உள்ளார் தளபதி விஜய். இத்திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இப்படி ஒரு சூழல் நிலவி கொண்டிருக்க விஜயுடன் சர்க்கார் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராதாரவி ஒரு பேட்டி ஒன்றில் சர்க்கார் திரைப்படத்தைப் பற்றியும் தன்னுடையரோலை பற்றியும் பேசி உள்ளார் அச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் தீயாய் பரவுகிறது.
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான திரைப்படம் தான் சர்க்கார் இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கிியிருந்தார்.
இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர்.
அவர்களில் ஒருவராக ராதாரவி நடித்திருந்தார். படம்110 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் வசூலில் 250 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
அவர் கூறியது : சர்க்கார் படத்தில் தனக்கான ரோல் மிகப் பெரிய ரோல் கிடையாது அந்த ரோலில் சில மாற்றங்கள் செய்திருந்தால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் அதை இயக்குனரிடம் கூறி கதையில் சிறு மாற்றத்தை செய்ய சொன்னேன் ஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்கவில்லை.
கதையின்படி முதலமைச்சரை அவரது மகள் கொன்று விடுவார் ஆனால் அவருக்கு பதிலாக நான் அவரை கதையின்படி கொன்றிருந்தால் எனது ரோல் மிக சிறப்பாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.
ஆனால் அது அப்படி நடக்கவில்லை இயக்குனர் அதை பெரிதாக கண்டு கொள்ளவும் இல்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்தார் மூத்த நடிகர் ராதாரவி.