போனி கபூர் தயாரிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் வலிமை. படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு தடைகளை சந்தித்தன் காரணமாக வலிமை திரைப்படத்தின் ஷிட்டிங் முடியவே இரண்டு ஆண்டு காலம் அவகாசம் எடுத்துக் கொண்டது.
ஒரு வழியாக படத்தை சீரும் சிறப்புமாக எடுத்ததை தொடர்ந்து அன்றிலிருந்தே படம் ரிலீஸ் ஆகும் வரை அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்துள்ளது. வெளிவந்த வெளிவந்த அப்டேட் பைல்களும் ரசிகர்களை ஆட்டம் போட வைப்பது அதற்கு ஏற்றார்போல வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
அண்மையில் வெளியான மேக்கிங் வீடியோ டிரைலர் ஆகியவை வேற லெவல். ஒருவழியாக வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா,ஹுமா குரேஷி, விஜய் டிவி பிரபலம் புகழ், யோகி பாபு மற்றும் பல அடாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.
அப்டேட்டுகள் ஒரு பக்கமும் குவிந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி கேயா சிக்ஸ்பேக் வைத்திருக்கவும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார் புகைப்படத்தை வெளியிட்டு கீழே சில பதிவுகளையும் அவர் மென்ஷன் செய்துள்ளார் அதாவது டாப் ஸ்டார் அஜித்துடன் நடிப்பதற்கு இப்படி இருப்பது மிக அவசியம் என கூறி சிக்ஸ்பேக் வைத் திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
அஜித்துடன் நடிப்பது மிகப்பெரிய ஒரு விஷயம் அது எனக்கு கிடைத்துள்ளது இந்த வருடம் நல்ல வருடமாக அனைவருக்கும் அமைய வேண்டும் அதே சமயம் எனக்கும் அமைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார் இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.
Because you got to be strong when your face off is with the #ULTIMATESTAR 💥💥#VALIMAI on jan13th..
Couldn’t have a better start to the new year.. pic.twitter.com/vnSx08MZbo— Kartikeya (@ActorKartikeya) January 2, 2022