தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் அதன் பிறகு படிப்படியாக சினிமாவில் கால் தடம் பதித்தார். வெள்ளி திரையில் தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் மற்றும் அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது இந்த இரண்டு திரைப்படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இதன் அதிகாரப்பூர் அறிவிப்பை பட குழு வெளியிட்டது. பல பஞ்சாயத்திற்கு பிறகு பல வருடம் கழித்து தான் அயலான் படம் வெளியாக இருக்கிறது. அதேபோல மாவீரன் திரைப்படம் ஆரம்பத்திலிருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனக்கு இருக்கும் கடனிலிருந்து எப்படி மீள முடியும் என அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்களை நம்பி தான் மிகப்பெரிய பிளான் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அப்படி இருக்கும் வகையில் மாவீரன் திரைப்படத்தை தயாரிக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் வருமான துறையினர் அதிரடியாக சோதனையை நடத்தி உள்ளார்கள்.
ரியல் எஸ்டேட் நடத்தி வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளது இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தினை பற்றி ஏதாவது ஒரு சிறிய துரும்பு சீட்டு கிடைத்தாலும் அதனை அப்படியே எடுத்துக் கொள்வார்கள் அதுமட்டுமில்லாமல் மாவீரன் திரைப்படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் உருவாகும் என பலரும் கூறுகிறார்கள்.
அப்படி இருக்கும் வகையில் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் பட குழுவினரும் கலக்கத்தில் இருக்கிறார்கள் இந்த திரைப்படம் வெளியானால் சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய பொருளாதார நிதியை சமாளிக்க வழி கிடைத்த விடும் என அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.