குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிடுவது உண்மை.. ஆனா பிரச்சனையே இப்பதான் ஆரம்பிக்குது – வேல ராமமூர்த்தி

Ethirneechal
Ethirneechal

Ethirneechal velaramamoorthy : சன் தொலைக்காட்சியில் நெடுந்தொடராக இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.. இதில் முக்கியமான கதாபாத்திரம் ஆதி குணசேகரன் சில நேரம் காமெடியனாகவும், வில்லனாகவும் நடித்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு வந்தார்.

ஆதி குணசேகரனாக நடித்து மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இயற்கை எழுதினார். இவரது மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.. நடிகர் மாரிமுத்து சினிமாவில் இயக்குனராக கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.. மேலும் அசிஸ்டன்ட் டைரக்டராகவும் சில படங்களில் பணியாற்றியவர்.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. இருந்தாலும் இவருக்கு அதிக பெயரையும் புகழையும் பெற்று தந்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.. இந்த சீரியலுக்கு பின்பு தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து காணப்படுகிறார்.. இவரது இழப்பு எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது..

இவரைத் தவிர குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்காது இருந்தாலும் இவர் தற்போது இல்லை என்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை மாற்றி ஆக வேண்டும்..  அதனால் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதில் வேல ராமமூர்த்தி என்பவர் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல்கள் பரவி வருகின்றன..

இந்த நிலையில் நடிகர் வேல ராமமூர்த்தி அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு எதிர்நீச்சல் சீரியல் வாய்ப்பு வந்திருப்பது உண்மை தான் ஆனால் தற்போது நான் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.. அதனால் எதிர்நீச்சலில் நடிக்க பேச்சு வார்த்தை தான் நடந்து கொண்டிருக்கின்றன.. இன்னும் உறுதியாக வில்லை என கூறியிருக்கிறார்..