தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் சிம்பு. இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன அந்த வகையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் கிருஷ்ணா என்பவருடன் கைகோர்த்து நடித்துள்ள திரைபபடம் தான் “பத்து தல”..
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா பவானி சங்கர், அனுசித்ரா, கலையரசன், ரெடிங்க்ஸிலே, சென்ராயன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்த நிலையில் நேற்று கோலாகலமாக இசை வெளியீட்டு விழாவை நடத்தியது. இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் தாண்டி பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய சிம்பு சொன்னது என்னவென்றால்.. நான் இங்கே வரும்பொழுது என் மனதில் ஓடிக் கொண்டிருந்த ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் மேடையில் அழுது விடக்கூடாது.
என்பது தான் படத்தில் சின்னதாக செண்டிமெண்ட் சீன் வந்தா கூட அழுதுடுவேன் ஆனா என் ரசிகர்களுக்காக அழக்கூடாது என்று நினைத்தேன் ஏன்னா நிறைய கஷ்டங்களை பாத்தாச்சு இனிமேல் சந்தோஷமாக இருக்கணும் ஒரு கஷ்டமான சூழலில் இருந்தபோ சினிமாவை எல்லாம் விட்டுட்டு போயிடுவோம் என்று ஒரு மனநிலையில் இருந்தேன் அப்போ தான் மஃப்டி என்கின்ற கன்னட படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக சொன்னார் ஞானவேல்..
கன்னடத்தில் ஒரு லெஜெண்டாக இருக்கும் சிவராஜ்குமார் நடிச்ச கேரக்டர்ல கண்டிப்பா என்னால நடிக்கவும் முடியுமான்னு நினைச்சேன். இந்தப் படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டதற்கு காரணம் கௌதம் கார்த்தி தான் ஒரு சின்ன படமாக இருந்தாலும் சரி பெரிய படமாக இருந்தாலும் சரி யார் படமாக இருந்தாலும் கஷ்டப்பட்டு உழைச்சு இருக்காங்கன்னா உடனே அவங்கள கூப்பிட்டு பாராட்டி விடுவேன் அது ஏன் என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள் ஏன்னா இங்க தட்டிக் விடுறதுக்கு நிறைய பேர் இருக்காங்க தட்டிக் கொடுக்கிறதுக்கு யாருமே இல்ல..
எனக்கு தட்டி கொடுக்கிறதுக்கு என் ரசிகர்கள் இருக்கிறாங்க இந்த படம் எனக்கு வெற்றி கிடைக்குதோ இல்லையோ கௌதம் கார்த்திக்கு இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் இதற்காக நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் முதலில் இந்த படத்தில் நடிச்சப்ப குண்டாக இருந்தேன் அந்த கேரக்டர் அப்படியே செட் ஆகிவிட்டது பின்னர் கிடப்பில் போட்ட சமயத்தில் நான் ஒல்லியாகி மாநாடு, வெந்து தனித்து காடு படத்தில் நடித்தேன் பிறகு மீண்டும் பத்து தல படத்தில் நடிக்கணும்னு மனநிலைமையிலிருந்தேன் பின்னர் கௌதமுக்கு வாக்கு கொடுத்த காரணத்தினால் நடிக்க முடிவு செய்தேன்..
அப்போ பத்து தல இயக்குனர் என்னிடம் வந்து சார் இந்த கேரக்டருக்காக நீங்கள் குண்டாகணும்னு சொன்னார் உனக்கு மனசாட்சியே இல்லையா ஒவ்வொரு கிலோவும் குறைக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் அப்புறம் தான் இந்த ஒல்லியான உடம்புடன் போட்டோ சூட் பண்ணி பார்த்தப்ப ஸ்கூல் பையன் மாதிரி இருந்துச்சு அதுக்கு அப்புறம் நான் உடல் எடையை அதிகரிக்க முடிவு செய்து இந்த படத்திற்காக வெயிட் போட்டேன் என கூறினார்.
இந்தப் படத்தில் எனக்கு ஜோடி கிடையாது என்னைக்குமே எனக்கு துணை என் ரசிகர்களான நீங்கள் தான்.. படத்திலேயேயும் ஜோடி இல்லை.. லைஃப்லையும் ஜோடி இல்ல.. அதைப் பற்றி பிரச்சனை இல்லை ஜில்லுனு ஒரு காதல் படத்தை நான்தான் பண்ண வேண்டியது ஆனால் அது வேறு ஒரு கதை அப்போ கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனது. இவ்வளவு வருஷம் கழிச்சு இப்போதான் நடந்திருக்கு அப்போ பண்ணி இருந்தா ஒத்த தல தான் கிடைத்திருக்கும் இப்போ உங்களுக்கு பத்து தல கிடைச்சிருக்கு என பேசினார். மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் அவர் மேடையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.