சின்னத்திரையில் நடித்து வந்த நடிகைகள் பலரும் தற்போது வெள்ளித் திரையில் நடிக்க படையெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்பட்டு வரும் நடிகை தான் வாணி போஜன்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரைக்கு அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
அதை தொடர்ந்து இவர் வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் வெள்ளித்திரையில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே,லாக்கப் ஆகிய திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் வாணி போஜன் மிக பெரிய திரை படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஆம் இவர் சியான் 60 படத்தில் நடித்து வலம் வருகிறார் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாணிபோஜன் நடிக்கும் மிகப்பெரிய படம் இதுதான் என்றும் கூறலாம் இதனால் இவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தை பற்றி நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது.
இதனையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஒரு தொகுப்பாளர் வாணிபோஜனிடம் உங்களுக்கு எந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆசை என கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்துள்ள வாணி போஜன் ஒரு நடிகரை மட்டும் நம்பினால் அது வேலைக்கு ஆகாது எனக்கு தமிழ் திரையுலகில் நடித்து வரும் எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடிப்பதற்கு ஆசையாக இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் இந்த தகவல் தற்பொழுது வாணிபோஜன் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.