எப்படிப்பட்ட கதையை சொன்னாலும் சரி, விஜயுடன் மட்டும் சேர்ந்து நடிக்கவே முடியாது.? கெத்து காட்டும் முன்னணி நடிகர்.

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் பல முன்னணி நடிகர்கள் தற்போது கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகின்றனர் ஆனால் ஒரு சிலரோ நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என உறுதியாக நின்று இதுவரை படங்களில் நடிக்காமல் இருந்தவர்களும் உண்டு அந்த வகையில் 80 காலகட்டங்களில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வெள்ளி விழா நாயகன் ஆக பார்க்கப்பட்டவர்.

நடிகர் மோகன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் ரஜினி விஜயகாந்த் போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியது அதன்பின் குணச்சித்திர கதாபாத்திரம், அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்கள் வந்தாலும் அதையெல்லாம் மறுத்து விட்டார்.

நான் சினிமா உலகில் இருக்கும் வரை ஹீரோவாகத்தான் நடிப்பேன் என உறுதியாக நின்றார் அதனால் இவர் பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் 66 வது திரைப் படத்தில் மைக் மோகன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என விஜய்யே முடிவு செய்தார் இதை படக்குழுவிடம் சொல்லி உள்ளார்.

படக்குழுவும் மோகனை சந்தித்து கதையை கூற முயற்சித்தது ஆனால்நடிகர் மோகன் கதையை கேட்காமல் விஜய்க்கு அண்ணனாக எல்லாம் என்னால் நடிக்க முடியாது என கூறி உள்ளார் பின் படக்குழு அதிகம் சம்பளம் தருவதாகச் சொன்னது ஆனால் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை.

விஜய் சார் நீங்க நடித்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவித்து உள்ளார் எனக் கூறியதும் மோகன் என்னுடன் நடிக்க அவருக்கு விருப்பம் இருக்கலாம் அவருடன் நடிக்க எனக்கு விருப்பமில்லை என சிரித்துக்கொண்டே மைக் மோகன் பேசியதாக கூறப்படுகிறது பின்பு நடிகர் ஷ்யாமை புக் செய்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.