பலகோடி போட்டு படம் எடுப்பது முக்கியமில்லை கதைதான் முக்கியம் .! பிரபல நடிகர் ஒரேபோடு.

vijay

தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து படம் எடுப்பது அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள். இப்படி தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக  பெரிய வரவேற்பு பெறவில்லை.

சமீபத்தில் வெளியான RRR திரைப்படமும் ஒரு தரப்பில் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்றாலும் மற்றொரு தரப்பிலிருந்து  கடுமையான விமரிசனத்தை பெற்றுள்ளது. மேலும் பட்ஜெட்டில் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இயக்குனர்கள் மற்றும்  கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை என் கொடுப்பதில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்தநிலையில் கன்னித்தீவு படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற  நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் அவர்கள் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சரியான வழி கிடையாது. இப்படியே சென்றால் இது போன்ற திரைப்படங்கள் விரைவில் தோல்வியை சந்திக்க நேரிடும். படத்திற்கு பட்ஜெட்டை விட கதைதான் முக்கியம் என்று கூறிஉள்ளார்.

c
suresh

தயாரிப்பாளர் கே ராஜனும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். தற்போது மகா மற்றும் மாமனிதன் படங்களை வெளியிடுகிறேன் ஆகையால் திரைப்படத்தை  என்னிடம் கொடுங்கள் நான் வெளியிட்ட தருகிறேன். அதனைத் தொடர்ந்து திரையரங்குகள் நிலையாக நிற்கவேண்டுமென்றால் சிறிய திரைப்படங்களை அதிக திரையரங்கில் வெளியிட வேண்டும்.புதுமுக இயக்குனர்கள் கதைகளை மையப்படுத்திய படம் எடுங்கள் எனவும்  ஆர்கே சுரேஷ் கூறினார்.

நடிகர் ஆர்கே சுரேஷ் ஒரு சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவர் கூறிய இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.