சூர்யாவின் தம்பி கார்த்தி தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். முதலில் பருத்திவீரன் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன.
கார்த்தியும் புதுமையான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இப்பொழுது கூட கார்த்தி கையில் இரண்டு மூன்று படங்கள் இருக்கின்றன கடைசியாக விருமன் படம் வெளிவந்து சக்க போடு போட்டது அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வழியாக இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி..
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து வருகின்ற தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அண்மையில் கூட சர்தார் படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இதனால் சர்தார் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
சினிமா உலகில் ஒரு நடிகர் சிறந்த இயக்குனர்களுடன் கை கோர்த்து வெற்றி படத்தை கொடுத்து விட்டால் போதும் அந்த கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் கார்த்தி அப்படி நடிப்பது கிடையாது அது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். வருடத்திற்கு இரண்டு அல்லது ஒரு படத்தை கொடுத்து வருகிறேன்.
ஒரு இயக்குனர் மீண்டும் என் கூட இணைய விரும்பினால் அவர் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.முத்தையா எனக்காக நீண்ட வருடம் காத்திருந்தார் அதனால் தான் விருமன் படம் உருவானது. இல்லையெனில்.. ஒரே நேரத்தில் தேதிகளை பெறுவது கடினம். அதனால் தான் அதைத் தவற விட்டேன் என நினைக்கிறேன். மேலும் லோகேஷ் உடன் இணைக்கிறேன் என கூறியுள்ளார்.