தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராசி கண்ணா. ஆரம்பத்திலிருந்து சிறப்பான படங்களை கொடுத்து பட வாய்ப்பை கைப்பற்றி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு கவர்ச்சியை காட்டியதால் தற்போது ரசிகர்கள் அங்கு தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இப்படி இருந்த நிலையில்தான் தமிழ் சினிமா இயக்குனர்களும் ராசி கண்ணாவுக்கு வாய்ப்புகளை கொடுத்து தட்டி தூக்கினர். அந்த வகையில் இமைக்கா நொடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழிலேயே தற்போது தங்கி விட்டார்.
மேலும் தற்போது இவரது கையில் சைத்தான் கா பச்சா, சர்தார், அரண்மனை 3 ஆகிய படங்கள் இருக்கின்றன மேலும் தமிழை தாண்டி இவருக்கு தெலுங்கிலும் மற்றும் வெப் சீரிஸ்லும் வாய்ப்புகள் இருப்பதால் தற்போது பிசியான நடிகையாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்து கொண்டு இவ்வளவு படங்களை கைப்பற்றி உள்ளது மற்ற நடிகைகளை எரிச்சல் அடைய செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது குட்டையான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார் அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்து அண்மையில் சமூகவலைத்தள பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடினார் அப்போது அவருடன் பல்வேறு விதமான கேள்விகள் கேட்டன.
அதில் ஒரு கேள்வி உங்களுக்கு வரப்போற கணவர் எப்படி இருக்க வேண்டும் என கேட்டனர் அதற்கு அவர் எனக்கு வரப்போற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும். அதிக ஈடுபாடோடு இருப்பவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறியுள்ளார்.