தென் இந்திய சினிமாவில் அனைவரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஆறு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்துள்ளார் அதன் பிறகு உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள ஒரு பிரமாண்ட ஹோட்டலில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் தற்போது வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகிய நான்கு மாதங்களிலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல விமர்சனங்களை பெற்று வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு குழந்தை பிறந்தது முன்னிட்டு திரை பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமிபத்தில் ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் தற்போது பெற்றோர்களாகி விட்டோம் எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துவிட்டது என புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார்.
இதைப் பார்த்த விக்னேஷ் சிவனின் உறவினர் ஒருவர் அதாவது விக்னேஷ் சிவனின் பெரியப்பா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்புறம் அவர் பேசும்போது ஜோதிகா, சினேகா திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ வில்லை இப்படி நெருக்கம் காட்டுகிறீர்களே அருவருப்பாக இல்லை என கூறியுள்ளார்.
மேலும் என்னதான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இவர்கள் செய்தது சுத்தமான தவறு. பணம் இருந்தால் என்ன வேணாம் செய்யலாம் என்ற நிலைமையில் நீங்க இருக்கிறீர்கள் இதனால் எங்களால் வெளியே தலை காட்ட கூட முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்து வருகிறவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.