கமலுக்காக எழுதிய கதை தான்.! ஆனால் விஜய் தான் நடிக்கவேண்டும்.! ஒற்றை காலில் நிற்கும் பிரபல இயக்குனர்…

kamal-vijay
kamal-vijay

நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ள பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியவர் மிஷ்கின். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ஒரு கதை வைத்திருப்பதாக இயக்குனர் மிஸ்கின் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்திருந்த யூத் திரைப்படத்தில் மிஸ்கின் அவர்கள் துணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடதக்கது இந்த படம் எடுக்கும்போது முதல் ஆறு மாதங்கள் விஜய்யிடம் பேசவே இல்லையாம். அதன் பிறகு விஜயே முன்வந்து மிஸ்கின் கையை பிடித்து ஏன் என்னிடம் பேச மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டுள்ளாராம்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை வேலையின் பரபரப்பாக தான் பேச முடியவில்லை என்று கூறிவிட்டு மிஸ்கின் சென்று விட்டாராம். அதன் பிறகு சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கிய மிஸ்கின்  அந்தப் படத்தின் பிரெவியூ சோவை விஜய்யிடம் போட்டு காட்டியுள்ளார்.

அதைப் பார்த்த விஜய் இந்த கதையை என்னிடம் வந்து கூறி இருக்க வேண்டியதுதானே என்று கேட்டாராம் அதற்கு உங்களை நினைத்து எழுதிய கதை தான் என்று கூறியவுடன் மிஸ்கின் கழுத்தை பிடித்தாராம் விஜய். அதற்கு மிஸ்கின் அவர்கள் இந்த கதையை உங்களிடமும் உங்களுடைய தந்தையிடம் கூறியிருந்தால் நீங்கள் ஒரு 18 காட்சிகளையும் உங்களுடைய அப்பா ஒரு 18 காட்சிகளையும் நீக்கி இருப்பார் என்று கிண்டல் அடித்துள்ளார்.

அதன் பிறகு நடிகர் கமலுக்காக எழுதிய ஒரு கதையை விஜயை வைத்து எடுக்க வேண்டாம் என்று ஆசைப்பட்டாராம். கமலை வைத்து புத்தரை மையப்படுத்தி ஒரு கதையை தயார் செய்து இருந்தார் இந்த கதை மிகப் பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்படும் என்பதால் இந்த படத்தில் விஜய் நன்றாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் இந்த கதையில் விஜய் தான் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.