தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் நலன் கருதி இருப்பது வழக்கம்தான்.
அந்த வகையில் சமூக நலன் கருதி திரைப்படம் நடிப்பது அவருக்கு மிகவும் பிடித்த வகையில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த மிகப்பெரிய சாதனை படைத்தது.
இவ்வாறு திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு எவ்வாறு தொண்டு செய்வது என்பதை நினைத்து நடிகர் விஜயகாந்த் சொந்தமாக அரசியல் கட்சி ஒன்றை துவங்கினார். இவ்வாறு அவர் அரசியலில் சிறந்து விளங்கி வந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் குறைத்தது கிடையாது.
இதற்கு பிறகு முழு மூச்சாக அரசியலில் களமிறங்கிய விஜயகாந்த் திடீரென உடல் நலக் குறைவின் காரணமாக திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது மட்டுமில்லாமல் தன்னுடைய அரசியலிலும் அதிக அளவு ஈடுபாடு கொடுக்க முடியாமல் போயிற்று.
என்னதான் உடல் நலக்குறைவு இருந்தாலும் மக்களுக்காக அரசியலில் இன்றும் உதயமாகி கொண்டே இருக்கிறார் இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய தொண்டர்களை சந்திக்க நேரில் காட்சியளித்த விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அங்கே எடுக்கப்பட்ட வீடியோக்களை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அவர்கள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு கண்கலங்கி உள்ளார். ஏனெனில் ஒரு நேரத்தில் ஆக்ஷன் திரைப்படம் புரட்சிகரமான வசனம் பேசிய விஜயகாந்திற்கு இப்படி ஒரு நிலைமை என்றால் யாருக்குத்தான் மனம் வருத்தம் அடையாது.