90 களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மதுபாலா. இவர் எடுத்தவுடனேயே அழகன், வானமே எல்லை, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ என பல வெற்றி படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஓடினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக மறுக்கப்பட்டன.
இதனால் சில காலம் சினிமா உலகில் இவர் தென்படாமலே இருந்தார் இப்பொழுது இவர் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்த அசத்தி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அந்த காலத்தில் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் பிறகு நடிக்கவே மாட்டார்கள்.
ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டது திருமணம் செய்து கொண்ட பிறகும் நடிகைகள் ஹீரோயின்னாகவும் நடித்து ஓடுகின்றனர் என கூறினார் மேலும் பேசிய அவர் ஹேமாலினியை பார்த்து சினிமாவில் நடிக்க வந்தேன் மணிரத்தினம், பாலச்சந்தர் போன்றவர்கள் நடிக்க வாய்ப்பு கொடுத்தனர்.
மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியை எடுத்த பொழுது என்னால் அவருடன் நடனம் ஆட முடியாது என்று கருதி உதவியாளர்களிடம் எனக்கு பயிற்சி கொடுக்க சொல்லிவிட்டு அரங்கை விட்டு போய்விட்டார் இரண்டு மணி நேரம் எனக்கு பயிற்சி கொடுத்து அதன் பிறகு பாடலை பாடமாக்கினர்.
எனக்கு அந்த சம்பவம் ஈகோவை ஏற்படுத்தியது எனக்கு நடனம் வராதா? பயிற்சி கொடுக்க சொல்லிவிட்டு போய் விட்டாரே பயிற்சி எடுத்தால் தான் இவரோட ஆட முடியுமா என்றெல்லாம் எண்ணங்கள் வந்தன.. அவரோட போட்டி போட்டு ஆட முடியாது தான் ஆனாலும் அந்த சம்பவம் என் மனதை மிகவும் காயப்படுத்தியது பெண்கள் அடிபணிவது வேறு.. விட்டுக் கொடுப்பது வேறு.. எதில் விட்டுக் கொடுக்கிறோம் என்பது முக்கியம் என கூறினார்.