தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சுருதிஹாசன். தன்னுடைய அப்பா அம்மா ஆகியோர் வாழ்வது குறித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் தற்போது தனி தனியாக பிரிந்து வாழ்வது தனது சந்தோஷத்தை கொடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஒன்று சேரவில்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. இருவரும் தனித்தனியே வாழ்கின்றனர் அவர்களுடன் நான் ஒன்று சேர்ந்து சந்தோஷத்துடன் இருக்கிறேன் என சுருதிஹாசன் தெரிவித்தார்.
நடிகர் கமலஹாசன் 1988ஆம் ஆண்டு சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு 16 ஆண்டுகளில் சிறப்பாக வாழ்ந்த இவர்களுக்கு சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர்கள் திடீரென 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர் இதுகுறித்து பேசிய சுருதிஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து வாழ முடியாது என்றாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தேவையற்ற சேர்ந்து இருப்பது அது இன்னும் தேவையில்லாத செயலாக போய்விடும் அதனால் அவர்கள் பிரிந்து இருந்தாலும் சந்தோஷத்துடன் இருக்கிறார்கள் என கூறினார்.
இவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் சந்தோஷத்தை அனுபவிக்க மாட்டார்கள் அதனால் பிரிந்து இருப்பதால் நல்லதொரு உற்சாகத்துடனும் செயல்படுவதாகவும் கூறுகின்றனர். இவர்கள் தனித்து வாழ்ந்தாலும் எங்களை சரியாகத்தான் வளர்த்துள்ளனர் தன்னுடைய தந்தை தன்னுடன் மிக நெருக்கமாகவும் அன்பாகவும் உள்ளதாகவும் தெரிவித்தார் சுருதிகாசன்.