தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார் லியோ திரைப்படத்தில் அது மட்டும் இல்லாமல் சஞ்சய் தத், பிரித்திவிராஜ், சுகுமாரன், நிவின் பாலி என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே நடித்து வருகிறார்கள்.
லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது இந்த நிலையில் இந்த லிஸ்டில் அட்லி மற்றும் வினோத் இருவரும் விஜய் திரைப்படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 திரைப்படத்திற்காக வினோத் அவர்கள் விஜய்க்கு கதை கூறி இருப்பதாகவும் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தை யார் இயக்கினாலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தா தான் நடிப்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த முடிவு விஜய் தரப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இதன்படி சமந்தா விஜயுடன் இணைந்தால் அவருக்கு விஜயுடன் நடிக்கும் நான்காவது திரைப்படமாக இந்த திரைப்படம் அமையும்.
மேலும் கத்தி, தெரி, மெர்சல் என மூன்று திரைப்படங்களில் சமந்தா விஜயுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.