6வது சீசனாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கு பெற்று வந்த நிலையில் தற்போது நான்கு போட்டியாளர்கள் வெளியேறி 17 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பல சண்டை சச்சரவுகள் இருந்து வரும் நிலையில் முக்கியமாக ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவிடம் நெருக்கமாக பழகி வரும் நிலையில் இது குறித்து ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் அளித்திருக்கும் பேட்டி தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பலரும் ரசிகர்களும் மத்தியில் பிரபலமானவர்கள் தான் அந்த வகையில் ஒருவர் தான் ராபர்ட் மாஸ்டரும் ஒருவர். இவர் வனிதாவை காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரைக் கூட தன் கையில் பச்சை குத்தி இருக்கிறார். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் இவர் இந்நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ரக்ஷிதாவின் மீது ஒரு கண்ணு வைத்து வருகிறார்.
மேலும் காதலுக்கு கண் இல்லை என கூறி ஓவராக சீன் போட்டு வரும் நிலையில் ரசிகர்கள் கடுப்பாகி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர் எனக்கு கேர்ள் ஃபிரண்ட் இல்லை அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறி வருகிறார். அதற்கு ரக்ஷிதா நம்ப உள்ள வந்து சில நாட்கள் தான் ஆகிறது பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சூதனமாக அவரிடம் இருந்து தப்பிக்கிறார்.
பிறகு ரக்ஷிதா என்ன செய்தாலும் அதனை ராபர்ட் மாஸ்டர் ரசிப்பது வழக்கமாக இருந்து வருகிறது ஆனால் ரக்ஷிதா இதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார். இவ்வாறு ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவிடம் நெருக்கமாக பழக முயற்சிக்கும் நிலையில் இதற்கு ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது ரக்ஷிதா நிகழ்ச்சியில் அழகாகத் தான் விளையாடி கொண்டிருக்கிறார் இந்த விளையாட்டுக்குள்ளேயும் வெளியிலேயும் அவங்களை தொடர்பு படுத்தி பேசுற விஷயங்களை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. பள்ளிக்கூடத்தில் ஒரு பையனும் பொண்ணும் சிரித்து பேசிக்கொண்டால் என்ன சொல்லுவார்களோ அந்த மாதிரி தான் இருக்கிறது.
ஆனால் சில விஷயங்கள் தவிர்க்கலாம் என்பது போல தான் இருக்கிறது மத்தபடி ரக்ஷிதா நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று கூறிவுள்ளார். மேலும் ராபர்ட் மாஸ்டர் வலுக்கட்டாயமாக ரக்ஷிதா கையை இழுத்தது தினேஷின் மொத்த குடும்பத்தினர் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனவே கூடிய விரைவில் ராபர்ட் மாஸ்டருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கூறுகிறார்களாம்.