நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகை நடிகர்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தோன்றி வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகைகளும் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான்.
அந்த வகையில் நடிகை திரிஷா, சமந்தா என பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம், தற்பொழுது இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன், இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர், சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகம் ஆனது 2013-ம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அந்தத் திரைப்படத்திற்கு முன்பே சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹன்சிகாவின் தோழியாக நடித்து இருந்தார்.
இப்படி ஒரு சில திரைப்படத்தில் தோன்றி மறைந்த இவர் சன் தொலைக்காட்சியில் தென்றல் என்ற சீரியலில் நடித்து இருந்தார். ஆனாலும் இவர் தமிழ் படம் 2 இல் நடித்ததன் மூலம் தான் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடத்தை பிடித்தார்.
அதன் பிறகு நான் சிரித்தால் திரைப் படத்திலும் நடித்திருந்தார் சமூக தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் கண்களை மூடிக்கொண்டு ஓரக்கண்ணால் பார்த்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் மூட வேண்டியதை மூடுங்கள் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.