விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே நன்கு பிரபலமடைந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட் இன்னும் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. அதாவது இன்றைய எபிசோடில் இனியா தாத்தாவின் மாத்திரையை கோபி திட்டியதால் விழுங்கிவிட்டார் அதனால் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள்.
அங்கு கோபி வெளியில் நிற்க பாக்கியா, தாத்தா, எழில் என அனைவரும் இனியாவின் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். பின்பு ஹாஸ்பிடலுக்கு பதறி அடித்துக் கொண்டு ஈஸ்வரி வருகிறார் அவருடன் செழியனும் வருகிறார் இருவரும் வந்தவுடன் இனியாவிற்கு என்ன ஆனது என பதற்றத்துடன் அழுது கொண்டே கேட்கிறார்கள் உடனே நடந்த அனைத்தையும்எழில் தன்னுடைய பாட்டியிடம் கூறுகிறார். அழுதுகொண்டு இனியாவை பார்க்கலாமா என பாட்டி கேட்க பார்க்கலாம் என உள்ளே அழைத்துக் கொண்டு போகிறார்கள்.
அங்கு இனியாவை பார்த்த பாட்டி அழுது கொண்டு புலம்புகிறார். பின்பு வெளியே வந்த ஈஸ்வரி பாட்டி என் பேத்திய ரெண்டு பேரும் என்ன செஞ்சீங்க என கோபி மற்றும் ராதிகாவை பார்த்து கிழித்து தொங்க விடுகிறார் அதுமட்டுமில்லாமல் என் பேத்தியை திட்டுவதற்கு நீ யார் என ராதிகாவை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் ஈஸ்வரி. மற்றொரு பக்கம் கோபியை பார்த்து இதெல்லாம் தேவையா கோபி உன்னுடைய முடிவாள் குடும்பமே இப்படி நிற்கிறது என கோபியையும் திட்டுகிறார்.
அடுத்த காட்சியில் உள்ளே இருந்து நர்ஸ் பில்லை கொடுக்க வருகிறார் உடனே பாக்கிய அதனை புடுங்கிக் கொண்டு நான் கட்டிக் கொள்கிறேன் என எழிலிடம் கொடுக்கிறார் செழியனும் எழிலும் பிள்ளை கட்ட செல்கிறார்கள் அங்கு எழில் பணத்தை எடுப்பதற்கு முன்பு செழியன் பணத்தை எடுத்துக் கொடுத்து கட்ட சொல்கிறார். பின்பு பிள்ளை கொடுத்துவிட்டு நிற்கிறார்கள் உடனே இனி இனியா என்னுடனே இருக்கட்டும் என கோபியும் பாக்யாவும் போட்டி போடுகிறார்கள்.
கோபி அதன் இனியாவிற்கு ஒன்னும் இல்லை என கூறிவிட்டார்களே நீங்கள் எல்லாம் செல்லுங்கள் நான் இணியாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறேன் எனக் கூற அதற்கு பாக்யா அதெல்லாம் முடியாது இனியா இனி என் கூட தான் இருக்கணும் அவளுக்கு நல்லது எது கெட்டது எது என்று எனக்கு நல்லாவே தெரியும் எப்ப அடம்பிடிப்பா எப்ப என்ன செய்வாய் என்பது எனக்கு தான் தெரியும் அதனால் இனி இனியா என் கூட தான் இருக்கணும் என திட்டவட்டமாக கூறி விடுகிறார்.
ஆனால் கோபி அதனை மறுக்க உடனே ராதிகா ஏன் அனைவரும் சண்டை போட்டுக் கொள்கிறார். இனியா விடமே இதனை கேட்டு விடலாமே எனக் கூறுகிறார் உடனே கோபியும் இது நல்ல ஐடியாவா இருக்கு இனியாவிடம் செல்கிறார்கள் இனியா உட்கார்ந்து இருக்கிறார் அவரிடம் கோபி அழுவது போலவும் கெஞ்சுவது போலவும் வா இணியா நம்ம வீட்டுக்கு போகலாம் என கூறுகிறார் அதேபோல் செழியனும் நம்ம வீட்டுக்கு போகலாம் என கூற அதற்கு கோபி நீ அமைதியாக இரு பேசிக் கொண்டிருக்கிறோம் இல்ல என கூறி விடுகிறார் கோபி.
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது இனியாவின் கையை பிடித்துக் கொண்டு கோபி கூப்பிட அதற்கு அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.