நடிகர் அருண் விஜய் இளம் வயதிலேயே ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். இருப்பினும் அப்பொழுது கதைகளத்தை சரியாக தேர்வு செய்யாமல் நடித்ததால் இவர் சினிமாவில் இருக்கின்ற இடம் தெரியாமல் போனார் இருப்பினும் சினிமாவில் தனக்கான நேரம் வரும் என காத்துக் கொண்டிருந்த அவருக்கு என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்டு அவர் நடித்திருந்தால் படம் சூப்பர் ஹிட் அடித்தது அருண் விஜயின் பெயரும் பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட ஹீரோ, வில்லன் போன்ற ரோல்கள் கிடைக்க ஆரம்பித்தன ஒவ்வொன்றிலும் வெற்றி கண்டார்.
தற்பொழுது தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார். அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான யானை திரைப்படமும் பிரம்மாண்டமான ஒரு வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. யானை திரைப்படத்தில் அருண் விஜயின் பேச்சு சண்டை காட்சிகள் என அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், பிரியா பவானி சங்கர், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் வெளியாகி இதுவரை உலக அளவில் சுமார் 25 கோடி வசூல் செய்து கொள்ளலாம் தமிழகத்தில் மட்டுமே 20 கோடியாம் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு லாபம்..
கிடைத்ததா இல்லையா என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது ஷேர் மட்டுமே தயாரிப்பாளருக்கு 11 கோடி கிடைத்துள்ளதாம் இதனால் இது ஒரு லாபகரமான படம் என சொல்லப்படுகிறது. இதனால் இயக்குனர் காரியம் சரி அருண்விதையும் சரி ரொம்ப சந்தோஷத்தில் இருக்கின்றனர் என்ற தகவலும் வெளி வருகிறது.