தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக விஷால் அவர்கள் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அத்தகைய படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் விஷால் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம் துப்பறிவாளன். முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். அதில் அவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரசிகர் மன்றம் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரின் மேனேஜர் ஹரிகிருஷ்ணா அவர்கள் நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டார் விஷால் அண்ணா சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லை நிஜத்திலும் ஹீரோ அவர் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என ஹரிகிருஷ்ணா கூறியுள்ளார்.
விஷால் அவர்கள் விஜய்யை வைத்து இயக்க வேண்டும் என்பது ஒரு கனவு அதை நிச்சயம் அவர் செய்து முடிப்பார் என கூறியுள்ளார். சினிமாவில் ஒரு முன்னணி ஹீரோ மற்று ஒரு முன்னணி ஹீரோவை வைத்து இயக்க உள்ளது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.