விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை கடந்துஒளிபரப்பாகி வருகிறது இருந்தாலும் இந்தத் தொடர் டி ஆர் பி யில் டாப் லிஸ்டில் இருந்து வருகின்றன. இதில் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி என்பவரும் நடித்து வருகின்றனர்.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் பாரதி கண்ணம்மா மேல் சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் கண்ணம்மா தன் மேல் எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க பல தடை பாரதியிடம் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க கூறினார்.
இருந்தாலும் இந்தக் கதையின்படி கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆகியும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் கதையை ஒட்டி வருகின்றனர். இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு வேறு சில கதையில் திருப்பங்களைக் கொண்டு வந்து சுவாரசியமாக ஒளிபரப்பாகிவருகிறது. பாரதிகண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமோ..
அதே போல் இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைந்து காணப்படுகின்றன. இதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் முதலில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார் அவர் பாதியில் வெளியேறியதால் தற்போது வினுஷா தேவி என்ற பிரபலம் நடித்து வருகின்றனர்.
பாரதிகண்ணம்மா தொடரிலிருந்து வினுஷா தேவியும் விலக உள்ளதாக சில தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்த நிலையில் சின்னத்திரை பிரபல நடிகை ஸ்ருதி ராஜ் பாரதிகண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வருவதாக கூறப் படுகின்றன. ஆனால் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளி வரவில்லை.