விஜயின் வாரிசு அம்மாவிற்கு ரகசிய திருமணமா.? அதுவும் எத்தனாவது முறை தெரியுமா.?

varisu
varisu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் தற்போது 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. மேலும் பொங்கல் விடுமுறை என்பதால் இன்னும் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்து வரும் நிலையில் அவர் தற்போது வெளிநாட்டு தொழிலதிபருடன் தொடர்பில் இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஜெயசுதா  பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் மற்றும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானார் அதனை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து மேலும் பிரபலமாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகை ஜெயசுதா அவர்கள் வெளிநாட்டு தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகை ஜெயசுதா மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர் இருவருமே கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தெலுங்கில் வெளியான வாரசுடு படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட தகவல் பொய்யான தகவல் என்று எண்ணியிருந்த ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி தான். அதாவது வாரசுடு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயசுதா உடன் அந்த வெளிநாட்டு நபரும் வந்திருந்தார். இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா இல்லை காதலர்களா என்று சமூக ஊடகங்களில் பல கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நடிகை ஜெயசுதா இரண்டு முறை திருமணமாகி விவாரத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து மூன்றாவது முறை திருமணம் செய்ய இருக்கிறாரா என்றும் கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் விஜயின் வாரிசு அம்மா தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.