மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருவதால் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று உள்ளார். மேலும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் ரஜினி, விஜயை தொடர்ந்து தற்போது தனுஷின் 43வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் மிகப்பெரிய பட்ஜெட்டில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை எடுத்து வருகிறது. இந்த நிலையில் விஜய் பற்றிய ஒரு செய்தியை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர் கூறியது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் அவரது நெருங்கிய நண்பராக மாளவிகா மாறி உள்ளார்.
அவர் தற்போது சொன்னது என்னவென்றால் விஜய் அவர்கள் நண்பர்களுக்காக எப்பொழுதும் இருப்பார் அவரது நட்பை அளவை நம்பவே முடியாது எப்பொழுது வேண்டுமானாலும் அவரை அழைக்கலாம் அவர் மொபைல் எடுப்பார். உதவி வேண்டும் என்றால் செய்வார் என்னிடம் மட்டுமல்ல அவரது எல்லா நண்பர்களிடமும் அப்படித்தான் பழகுவார்
எனது சில நண்பர்கள் அவரை விட அதிக பிசியாக இருப்பதாக காட்டிக் கொள்வார்கள் எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் உடனே போன் செய்தால் பேசுவார். நான், விஜய் சார், ஆடை வடிவமைப்பாளர் பல்லவி 3 பேரும் சேர்ந்து வாட்ஸப்பில் ஒரு குழுவில் இருக்கிறோம் பல்லவி எப்போது அழைத்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் விஜய் போன் எடுக்க மாட்டார்.
ஆனால் நான் போன் செய்தால் உடனே எடுப்பார் நாங்கள் இருவரும் சேர்ந்து பல்லவியை செம்மையாக கலாய்ப்போம்.வ நாங்கள் பேசும்போது கூட எந்த ஒரு தவறான வார்த்தையும் வராது எதிர்மறையான ஒரு வார்த்தையும் வந்ததை நான் கேட்டதில்லை. நேர்மையான சிந்தனை கொண்டவர் மிகவும் இனிமையான நபர்.
என்றாவது ஒருநாள் படப்பிடிப்பு தயாராக இருப்போம் அங்கு கிளம்பி போனால் அன்று படப்பிடிப்பு அங்கு ரத்தாகி போயிருக்கும் இதற்காகவா சீக்கிரம் எழுந்தோம் என எல்லோரும் புலம்புவோம் அப்போது கூட விஜய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சகஜமாக இருப்பவர் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது என கூறினார்.