புஷ்பா 2 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா..? இதற்கெல்லாம் காரணம் இந்த ஒரே படம் தான்..!

vijay-sethupathi-11
vijay-sethupathi-11

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோவாக திரைப்படத்தில் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மக்கள் செல்வன் தான் விஜய் சேதுபதி. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டும் இல்லாமல் தற்சமயம் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான விஜய் சேதுபதி அவர்கள் அதன் பிறகு தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் வில்லன்  கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி இருப்பார்.

இவ்வாறு இந்த திரைப்படம் இரண்டுமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும் நமது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார். அந்த வகையில் இவருடைய நடிப்பு மிகவும் பிரமாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படத்தில் அவர் கமிட் ஆகி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் அமைந்தது இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா பகத் பாஸில் அல்லு அர்ஜுன் போன்றவர்கள் நடித்த நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பொதுவாக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தான் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்கு 20 கோடி வரை சம்பளம் பெறுவது வழக்கமான செயல் தான் ஆனால் புஷ்பா இரண்டாம் பாகம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சுமார் 35 கோடி சம்பளமாக வாங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவ்வாறு வெளிவந்த தகவலின் படி வில்லன் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு கிராக்கியா என பலரும்  சமூக வலைதள பக்கத்தில் பேசி வருகிறார்கள்.