கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பொருட்செலவில் எடுத்தார். முதல்பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம் பிரபு, சாரா அர்ஜுன், ஜெயராம், பார்த்திபன்..
ஜெயசித்ரா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின், அஸ்வின் ராவ், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், மாஸ்டர் ராகவன், கிஷோர், ரகுமான், பாபு ஆண்டனி, மோகன் ராமன், நாசர், லால், வினோதினி, நிழல்கள் ரவி, ரியாஸ் கான், விஜயகுமார், பாலாஜி, சக்திவேல் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.
படத்தை மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் போட்டி போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்தனர் படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் நல்ல விமர்சனத்தை பெற்றது இதுவரை சூப்பராக ஓடி கொண்டு இருக்கிறது. மேலும் வசூல் வேட்டையும் சூப்பராக நடத்தி வருகின்றனர் இதுவரை மட்டுமே 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல பத்திரிகையாளரும் வலைப்பேச்சு பிரபலமுமான பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. நல்லவேளை இந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை நடித்திருந்தால் இந்த படம் பொன்னியின் செல்வன் படமாக இருந்திருக்காது.
விஜய் படமாக தான் இருந்திருக்கும் மேலும் அவர் நடித்து வெளியாகி இருந்தால் அஜித் ரசிகர்கள் மண்ணை அள்ளி போட்டு இருப்பார்கள். ஏகப்பட்ட பிரச்சனைகள் சந்திக்க நேர்ந்திருக்கும் என பிஸ்மி கூறி உள்ளார் இந்த செய்தி தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.