Actress Anushka shetty : நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர்.. இவர் தமிழில் மாதவனுடன் இணைந்து “ரெண்டு “என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை கைப்பற்றி பிரபல நடிகையாக திகழ்ந்தவர்..
ஒரு கட்டத்தில் சோலோவாக இவர் நடித்த அருந்ததி திரைப்படம் இவரது வாழ்க்கையையே திருப்பி போட்ட படமாகும்.. இந்த படத்தின் மூலம் அதிக பெயரையும் புகழையும் சம்பாதித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் குண்டாக நடித்தார்.
பிறகு உடல் எடையை குறைக்க முடியதால் பட வாய்ப்புகள் பெரிதும் கிடைக்காமல் இருந்த நிலையில் பாகுபலி சீரீஸ் படம் மட்டும் அனுஷ்காவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்தது..இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனுஷ்கா அவரது சினிமா வாழ்க்கை மற்றும் விஜய் உடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்..
ஒரு நேரத்தில் ஹீரோக்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்த பொழுது என்னுடைய அருந்ததி படம் வெளியாகி வெற்றி பெற்றது அதனை சினிமா உலகமே கொண்டாடியது, பிறகு என்னுடைய அமைதிக்காக ஒரு சின்ன பிரேக் எடுத்தேன் ஆனால் அது இவ்வளவு பெரியதாக மாறும் என நினைக்கவில்லை என்றார். மேலும் விஜய் உடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்த போது என் உச்சி மண்டையில பாடலின் சூட்டிங் நடந்தது.
அப்பொழுது நடனக் கலைஞர் ஆடி காட்டியதை அமைதியாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஷாட் ரெடி என்று சொன்னவுடன் அச்சு பிசிறாமல் அப்படியே ஆடி முடித்தார் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை, இன்று வரை எப்படி ஒரே ஷாட்டில் அவர் ஆடி முடித்தார் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறேன்.
விஜய் டான்சில் பெரும்பாலும் ரீடேக் வாங்காதவர் என்றார். மேலும் பேசிய அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்ட என்னால் அடுத்தடுத்த படங்களுக்கு பழைய நிலைமைக்கு வர முடியவில்லை, இருந்தும் ஆபரேஷன் செய்யும் ஐடியா எனக்கு இல்லை, யோகாவால்தான் வெயிட் குறைப்பேன் என்று கூறியிருக்கிறார்..