வைகைபுயல் வடிவேலு மகன் சினிமாவில் என்ட்ரியாக உள்ளாரா.? அவரே பேட்டியில் சொன்ன செய்தி.

vadivelu
vadivelu

90 காலகட்டங்களில் உச்ச நட்சத்திரமாக இருந்த  செந்தில்,கவுண்டமணி ஆகியோர்கள் இருக்கும் பொழுதே தனது அசாதாரணமான நடிப்பு திறமையை வெளிக்காட்டி அவர்களை ஓரங் கட்ட செய்து தற்போது தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் வடிவேலு.

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் காமெடியனாக அசதி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு ஒரு சில இயக்குனர்கள், ஹீரோக்கள் கதை சொல்ல அதிலும் அவருக்கு ஆசை வந்தது அந்த வகையில் 23ம் புலிகேசி இவருக்கு சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகமாக 24ம் புலிகேசி படம் உருவாகி இருந்தது.

அப்பொழுது தயாரிப்பாளர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமான வடிவேலு அதன் பிறகு நான்கு வருடங்கள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு அந்த பிரச்சினை ஒருவழியாக பேச்சுவார்த்தைக்கு வந்து முடிந்தது.தற்போது மீண்டும் சினிமா உலகில் நடிக்க ரெடியாக இருக்கிறார் எடுத்த உடனேயே தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.

முதலில் சுராஜ் இயக்கும் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் அதன் பிறகு அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுடன் கைகோர்க்க இருக்கிறார். இந்த நிலையில் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியன் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

அவர் பேசியது : எனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வடிவேலு மகன் சுப்பிரமணியத்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாகவும் அதற்காக கொஞ்ச நாட்கள் ஆகும் எனவும் கூறியுள்ளார் இவர் அவ்வாறு கூறியது தற்போது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. வடிவேலின் மகன் சுப்ரமணியனும் சினிமாவில் தொடர்ந்து  நடித்தால் நல்ல வரவேற்ப்பை பெறுவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.