இலங்கை பெண்ணான லாஸ்லியா தனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர். பின்பு தமிழில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் அவரது கொஞ்சும் தமிழ் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்தார்.
பிக்பாஸ் வீட்டில் நீண்டநாட்கள் பயணித்த லாஸ்லியாவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் சில அடுத்தடுத்து குவிந்தன. அப்படி தமிழில் முதல் படமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் ஹீரோயினாக லாஸ்லியா நடித்து அசத்தி இருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து லாஸ்லியா நடித்து வருகிறார் இந்த படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிய வருகிறது.
படங்களை தாண்டி சோஷல் மீடியாவிலும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா தற்போது அவரது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே மேலும் லாஸ்லியா அவரது உடல் எடை குறைந்த புகைப்படங்களையும் அப்பப்போ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியா உடல் எடையை குறைத்து உள்ளதற்கு காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
லாஸ்லியா விடம் முன் இருந்த chuppy லாஸ்லியாவை தான் ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்த நிலையில் தற்போது ஏன் உடல் எடையை குறைத்து உள்ளீர்கள் என கேட்டதற்கு எனக்கு ஹெல்த் ஐஷுஸ் இருக்கு அதனால் தான் எடையை குறைக்க வேண்டியது இருந்தது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் நான் ஒல்லியாக தான் இருந்தேன்.
அந்த நிகழ்ச்சிக்கு வரும் போதுதான் வெயிட் போட்டு இருந்தேன் தற்போது மீண்டும் ஒல்லி ஆக்குகிறேன் எனவும் சினிமாதான் எனது துறை என முடிவெடுத்து விட்டேன் அதனால் ஸ்கிரீன்ல பெரியதாக தெரியக்கூடாது எனவும் கடின உழைப்பை போட்டு வருகிறேன் என இந்த இரண்டு காரணங்களையும் தெரிவித்துள்ளார்.