தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வரும் ஒரு இயக்குனர் என்றால் அது கௌதம் மேனன் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் மூன்றாவது முறையாக சிம்புவின் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள் அந்த வகையில் இந்த திரைப்படம் தற்பொழுது திரையரங்கில் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படம் ஆனது கலவையான விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமில்லாமல் கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி வசூல் பெற்றது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் இதனால் வெந்து தணிந்தது காடு படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து விட்டது.
ஆனால் இந்த திரைப்படம் ஆனது மாநாடு திரைப்படத்தின் வசூலுக்கு ஈடு கொடுக்கவில்லை என்பதுதான் விமர்சனங்களை பார்க்கும் பொழுது தெரிகிறது அது மட்டும் இல்லாமல் பல்வேறு மீம்ஸ் கிரியேட்டஸ்களும் பல மீம்ஸிகளை கிரியேட் செய்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் சம்பந்தமான கதை அம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது.
அதேபோல இந்த திரைப்படம் ஆனது கமலஹாசனின் நாயகன் திரைப்படத்தை அப்படியே பிரதிபலிப்பது போன்று சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களில் கூறப்பட்டுள்ளது அது மட்டும் இல்லாமல் ஒரு சிலரோ விஜய் திரைப்படத்தை அப்படியே பட்டிய டிங்கரிங் பார்த்துள்ளார்கள் என கூறுகிறார்கள்.
அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே என்ற திரைப்படத்தில் குடும்ப கஷ்டத்திற்காக விஜய் மும்பைக்கு செல்கிறார் அங்கு யாருக்கும் தெரியாமல் தாதாவாகும் வழியில் சிக்கிக் கொண்டு அவர்களுக்கு வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது பின்னர் அந்த பணத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தை வசதியாக வாழ வைத்து வந்தார்.
அதேபோல கதை அம்சம் கொண்ட திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இந்த திரைப்படத்திலும் சிம்பு வேலை தேடி மும்பை செல்கிறார் அப்பொழுது தாதா ஆகிறார் ஆக மொத்தம் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே மாதிரியாக இருக்கிறது என கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.