தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் அண்மை காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படம் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்புகின்றன இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் பீஸ்ட் வெற்றியை..
தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்த இந்த படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள எண்ணூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் விஜயும் லோகேஷும் இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஏன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்கி வருகிறது இந்த படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள் என சொல்லப்படுகிறது.
அதில் கௌதம் மேனன், அர்ஜுன், சிம்பு போன்றவர்கள் நடிக்க இருப்பாதாக ஒரு தகவல் கசிந்த வண்ணமே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது வாரிசு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது இந்த நிலையில் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று..
இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதுதான் தளபதியை 67 படத்தின் லுக்கா, லோகேஷ் கனகராஜ் போல மாறிட்டீங்க எனக் கூறி லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ தளபதி விஜய் செம்ம மாஸாக இருக்கும் அந்த புகைப்படம்.