தளபதி 66 : படத்தில் விஜயின் கதாபாத்திரம் இது தானா.? இப்படி ஒரு ரோலில் விஜய் நடிச்சதே கிடையாது.?

vijay
vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத வசூல் மன்னனாக வலம் வருகிறார் சமீபகாலமாக விஜய் இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அசத்துகிறார் அதிலும் நாம் யாரும் எதிர்பார்க்காத இயக்குனருடன் கைகோர்க்கும் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது அந்தவகையில் முதல் முறையாக இளம் இயக்குநரான நெல்சன் திலிப்குமார் உடன் கை கோர்த்தது.

தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கில் தற்போது மிக விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது கடைசியாக டெல்லியில் நடந்தது அதைத் தொடர்ந்து படக்குழு வெகுவிரைவிலேயே ரஷ்யா செல்ல திட்டமிட்டு உள்ளது இந்த திரைப்படத்தை முடித்து விட்டு.

விஜய்  உடனடியாக தளபதி விஜய் தனது 66 வது திரைப்படத்தில் பணியாற்ற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இவர் தெலுங்கு சினிமாவில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்ற இயக்குனர் வம்சியுடன் இணைய உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு என்பவர் தயாரிக்க உள்ளார். இந்த நிலையில் தளபதி 66வது படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்றும் ஒரு தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் தளபதி விஜய் ஒரு பத்திரிகையாளராக மாறி வைல்ட் லைப் புகைப்பட கலைஞராக நடிக்கிறார்.

காடு மற்றும் இயற்கை வளங்களை அழிப்பதற்கு எதிராக பேசும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் நடிப்பதோடு அசத்தல்லான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.