தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த வசூல் மன்னனா.? உண்மையை உடைக்கும் மோகன் ராஜா

thani oruvan
thani oruvan

Thani oruvan : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் ஜெயம் ரவி இவருடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா தான் காரணம் அவர் ஜெயம் ரவியை வைத்து ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷப்பிரமணியம்..

தில்லாலங்கடி, தனி ஒருவன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வளர்த்து விட்டார் இப்படி வலம் வந்த மோகன் ராஜா மற்ற டாப் ஹீரோக்களையும் வைத்து படம் எடுத்துள்ளார் அந்த வகையில் விஜய் வைத்து வேலாயுதம், சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன், சிரஞ்சீவி வைத்து God father போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் அடுத்த ஆண்டில் தனி ஒருவர் 2 திரைப்படத்தையும் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. தனி ஒருவன் 2 திரைப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாகவும் ஹீரோயின்னாக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா நடிக்கிறார்கள் என்பது கூறப்படுகிறது வில்லன் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை..

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனி ஒருவன் படம் குறித்து பேசி உள்ளார்.. தனி ஒருவன் கதையை தெலுங்கு நடிகார் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க வேண்டுமென நினைத்து தான் எழுதியதாகவும் அவர் அப்பொழுது காதல் கதை  சமந்தப்பட்ட படங்களில் மட்டுமே நடித்த வந்ததால் தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்ததாகவும் இயக்குனர் மோகன்ராஜ் கூறியுள்ளார்.

அதன் பிறகு இந்த படத்திற்கு ஜெயம் ரவி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடி உலக அளவில் சுமார் 68 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து தனி ஒருவன் 2 படமும் உருவாக இருக்கிறது.