“பத்து தல” திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த டாப் ஹீரோவா.? சிம்பு கமீட்டானது எப்படி தெரியுமா

pathu-thala
pathu-thala

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க சிம்பு இயக்குனர் கிருஷ்ணா உடன் கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் தான் பத்து தல.. இந்த திரைப்படம் ஒரு ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் தற்பொழுது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது படம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு படம் என்பதால் இந்த படத்தில் ஆக்சன் அதிகமாக இருக்கிறது அது தான் டீசர் மற்றும் டிரைலரில் பெரிய அளவு தெரிந்தது. படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி, ப்ரியா பவானிசங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், சென்ராயன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர்.

படம் வெளிவர இன்னும் விரல் கேட்டு என்னும் நாட்களே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன அண்மையில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு படம் குறித்தும் தனது சினிமா  குறித்து பெரிய அளவில் பேசியிருந்தார் அதனை தொடர்ந்து இப்பொழுது பத்து தல திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

படக்குழுவினர் முதலில் ரஜினியிடம் இந்த படத்தின் கதையை போட்டு காட்டி உள்ளனர் படத்தை பார்த்த ரஜினியும் நன்றாகத்தான் இருக்கிறது தெரிவித்தார் ஆனால் ரீமேக் படம் என்பதால் நடிக்க தயங்கினாரா அதன் பிறகு படக்குழு சிம்புவை அனுப்பியது அவருக்கு இந்த கதையை பற்றி கூறியது. அவரும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் இப்படி தான் பத்து தல திரைப்படம் உருவானது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.. ரஜினி அல்லது சிம்பு தான் நடிக்க வேண்டும் என இந்த படத்தில் முடிவு செய்துவிட்டாராம் அவர் நினைத்தது போலவே கடைசியாக சிம்பு இந்த படத்தில் நடித்தது அவருக்கு மிகப்பெரிய ஒரு சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறதாம்.

rajini
rajini