விக்ரம் மிரட்டிய “அந்நியன்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது.! இந்த டாப் ஹீரோவா.? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்.

anniyan
anniyan

நடிகர் விக்ரம் படத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தனது நடிப்பையும், உடல் மாற்றியமைத்து நடிப்பது இவரது ஸ்டைல். அப்படி இவரது பல திரைப்படங்கள் வெளிவந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது அதில் ஒன்றுதான் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அந்நியன்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்திருப்பார்.இவரது நடிப்பை பார்க்கவே மக்கள் கூட்டம் திரையரங்கில் அலை மோதியது. மேலும் அதிக நாட்கள் அந்நியன் ஓடியதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி காண்பித்தது. விக்ரம் கேரியரில் இது ஒரு ப்ளாக்பஸ்டர்  படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விக்ரம் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்தார் இவருடன் கைகொடுத்து சதா, விவேக், நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற பல ஜாம்பவான்கள் நடித்து இருந்தனர்.  மற்ற படங்களைவிட இந்த படம் மாறுபட்ட படமாக இருந்தது மேலும் பல சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும் படமாக இது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது கூட இந்த திரைப்படம் வெளியானால் ரசிகர்கள் பெரிய அளவில் கண்டு மகிழ்கின்றனர் ஏனென்றால் அந்த அளவிற்கு இன்னும் இந்த திரைப்படம் மக்கள் மனதில் இருக்கிறது என்பதுதான் உண்மை இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் கசிந்துள்ளது. அந்நியன் திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது.

வேறு ஒருவர் தானாம். அதன்பிறகு தான் விக்ரம் நடித்தாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர் முதலில் இந்த படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தான் கூறி உள்ளார் அப்பொழுது அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படம் விக்ரம் கைக்கு மாறியதாம்.