விஜயின் அடுத்த பட டைட்டில் இதுவா.? லோகேஷ் செய்யப் போகும் தரமான சம்பவம்.!

viiay
viiay

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதில் லோகேஷுக்கு நல்ல படமாக மாறியது விக்ரம் திரைப்படம் தான்.

ஏனென்றால் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அதிக வசூலையும் பெற்று தந்தது. விக்ரம் திரைப்படம் தற்போது வரை மட்டுமே 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது.

மேலும் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளார் தற்பொழுது விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ஒரு படத்திற்கு 25 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுக்கிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.

முதலாவதாக தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து விஜயின் 67 ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் பெருமளவு பேசப்பட்டு வருகிறது இது இப்படி இருக்க விக்கிபீடியா பக்கத்தில் அடுத்த தளபதி 67 படத்தின் டைட்டில் மென்ஷன் செய்துள்ளது.

அதில் சொல்ல உள்ளது என்னவென்றால் தளபதி 67 படத்தின் டைட்டில் நான் வாழும் உலகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..