தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து “லியோ” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போதே கூறிவிட்டனர் ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
விஜயுடன் இணைந்து மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றன. படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் சொல்லப்படுகின்றன.
லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு உடன் இணைய உள்ளார். அந்தப் படம் முழுக்க முழுக்க அப்பா – மகனுக்கு இடையே நடக்கும் கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து உருவாக இருக்கிறதாம் இந்த படத்திற்கான வேலைகளில் தான் தற்பொழுது வெங்கட் பிரபு அதிகம் தீவிரம் காட்டி வருகிறார். ஆம் தற்பொழுது நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி 68 தலைப்பு குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது அண்மையில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் அமர்ந்து இந்த படத்தின் தலைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது அப்பொழுது பலரும் பல்வேறு விதமான தலைப்பு சொல்லி வந்த நிலையில் “சிஎஸ்கே” என தலைப்பு வைக்கலாம் என கூறியுள்ளனர்.
இந்த தலைப்பு பலருக்கும் பிடித்திருந்தாலும் விஜையிடம் கேட்டு உறுதி செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக வைக்கலாம் என கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது இந்த தகவல் தற்பொழுது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் எப்படியும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 68 படத்திலிருந்து டைட்டில் அல்லது ஏதேனும் அப்டேட் வெளிவர வாய்ப்புள்ளது.