சின்னத்திரையில் தனது அயராத உழைப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் வெள்ளித்திரைக்கு மாறி தற்போது மிகப் பெரிய நடிகனாக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.
பின்பு வெள்ளித்திரையில் காமெடியனாக களமிறங்கி பல திரைப்படங்களில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் இவரது திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவதால் இவர் தமிழ் திரை உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் பொதுவாகவே இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுவதால் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் அயலான்,டான் போன்ற படங்களிலும் இவர் பிஸியாக நடித்து வருகிறார் இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் சிவகார்த்திகேயன் ஒரு புதிய அறிமுக இயக்குனர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிப்பதாகவும் அந்தத் திரைப்படத்திற்கு சிங்கப்பாதை என தலைப்பு வைத்ததாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும் தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்தத் திரைப்படத்தைப் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பார் இவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிப்பார் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.