நடிகர் சூர்யா தொடர்ந்து சமூக அக்கரை உள்ள படங்களில் சூப்பராக நடித்து வெற்றி கண்டு வருகிறார். கடைசியாக இவர் சூரரைப்போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க சிறந்த இயக்குனருடன் கைகோர்க்கிறார்.
முதலாவதாக இயக்குனர் பாலா உடன் கை கொடுத்து தனது 41வது படத்தில் நடித்து வருகிறார் இவர்களிருவரும் 15 வருடங்களுக்குப் பிறகு இப்போது இணைவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. சூர்யா 41 வது திரைப்படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்து பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் ஏற்பட்டதாகவும் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப் பட்டதாகவும் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்பது கேள்விக்குறியானது.
என பல வதந்திகள் வெளியாகியது. அண்மையில் சூர்யா அதை எல்லாம் வெறும் வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்த கட்ட ஷூட்டிங் மதுரையில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கான டைட்டில் வேலையும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் தற்போது படக்குழு இந்த படத்திற்கு இரண்டு பேரை தேர்ந்தெடுத்து உள்ளது.
வணங்கான் அல்லது கடலாடி இதில் ஏதேனும் ஒரு பெயரை இந்த படத்திற்கு வைக்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது.