நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு இதுவா.? செம்ம மாஸா இருக்கு..

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை முழு ஈடுபாட்டுடன் சினிமாவே கதி என கடந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து டாப் நடிகர்களாக வலம் வருவரும் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள் மத்தியில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஓரிரு படங்களிலேயே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்து தற்போது உச்ச நட்சத்திர நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.

இவரது படங்கள் ஒவ்வொன்றும் காமெடி கலந்து அமைவதால் ரசிகர்கள் அதனை என்ஜாய் செய்து பார்த்து வருகின்றனர். மேலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒவ்வொன்றும் டாப் லிஸ்டில் அமைந்து வருகின்றன அப்படி கடைசியாக நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த டாக்டர் திரைப்படம்.

100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் திரைப்படம் கடந்த மே 13-ம் தேதியன்று திரையரங்கில் வெளியாகி தற்போது வரை வசூல் வேட்டை அமோகமாக  ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அயலான் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் போன்றவை நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் தனது 20வது மற்றும் 21 திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே அந்த வகையில் சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படம்.

ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் கமல் பிலிப்ஸ் மற்றும் சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக பிரபல நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின் டைட்டில் குறித்து கூறியுள்ளார். அதன்படி SK 21 படத்தின் டைட்டில் மாவீரன் என கூறப்படுகிறது.