ரஜினிகாந்தின் அடுத்த பட டைட்டில் இதுவா.? வெளியே கசிந்த தகவல்.

rajini
rajini

அண்மைகாலமாக இளம் இயக்குனர்கள் டாப் ஹீரோக்களை வைத்து படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில்  இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதுவரை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர்.

கடைசியாக விஜய்யை வைத்து பீஸ்ட் என்னும் படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். அடுத்து இயக்குனர் நெல்சன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய படத்தை எடுக்க இருக்கிறார்.ரஜினி கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

படம் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலைப் பெற்று உள்ளதால் அடுத்த படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக நெல்சன் உடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது தலைவர் 169 படத்தின் சூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட ஹீரோ சிவராஜ்குமார்  நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து தலைவர் 169 படத்தில் பிரியங்கா அருள் மோகன், ஐஸ்வர்யா ராய் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது திரைப் படத்திற்கான டைட்டில் என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு புதிய பெயரை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி பார்க்கையில் ரஜினியின் அடுத்த பட டைட்டில்  ஜெயிலர் என பெயர் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பெயர் ஜெயிலர் என இருந்தால் படம் முழுக்க முழுக்க ஒரே ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.